A.K.M. Ramzy / 2021 மே 20 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி;
கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து பெண் இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை,உயிரிழந்த பெண் அணிந்திருந்த 18 பவுண் நகை மாயமாகியுள்ளது. கடந்த 6ஆம் திகதி காலை பத்மஜாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியானது.
அன்று மாலை 6.30 மணியளவில், கிருமாம்பாக்கம் அறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார். அப்போது, பத்மஜா கழுத்தில் 8 பவுண் தாலி , 3 பவுண் செயின், 3 பவுண் திருமாங்கல்யம், 4 தங்க காசு மற்றும் சிறிய கம்மல், வெள்ளிக் கொலுசு அணிந்திருந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் (7 ஆம் திகதி) அதிகாலை 3:45 மணி அளவில் பத்மஜா உயிரிழந்தார்.
உடலை சவக்கிடங்கில் வைக்க, பத்மஜா அணிந்திருந்ததாக கொலுசு, கம்மலை மட்டும் கணவர் செந்தில்குமாரிடம் செவிலியர்கள் வழங்கியுள்ளனர். அதனை செந்தில்குமார் வாங்காமல், தாலி சரடு, திருமாங்கல்யம் உள்ளிட்ட 18 பவுண் நகைகள் எங்கே என கேட்டதற்கு, பத்மஜா இதை மட்டுமே அணிந்திருந்ததாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து செந்தில்குமார்,கிருமாம்பாக்கம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago