2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி!

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 01 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

  

சென்னை

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில்  அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளதாவது:-

'மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

ஒக்ஸிசன் அளவு 90இக்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும்.   

கொரோனாவால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதனை இப்படி நீட்டித்துக்கொண்டிருக்க முடியாது.ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நான் ஒப்படைத்துள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையே தேவை. தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக செயல்படும்

கொரோனாவை வெல்வோம்!

நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்! என கூறி உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .