A.K.M. Ramzy / 2021 ஜனவரி 25 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா;
இந்தியாவின் ஷீரம் நிறுவனம் தயாரிக்கும் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த நேபாள அரசு அனுமதியளித்துள்ளது. அதற்கான தீர்மானம் நேபாள மருந்து நிர்வாக திணைக்களத்தால் எடுக்கப்பட்டது.
சில விதிமுறைகளுக்கு அமைய அவசரகால தேவைகளுக்காகவும் கொவிட்-19 எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுத்த நேபாள மருந்து நிர்வாக திணைக்களத்தினால் ஜனவரி 15ஆம் திகதியன்று இத்தடுப்பூசிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தயாரிப்பாளர்கள், தங்களது திணைக்களத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னரே நேபாளத்தில் பயன்படுத்தலா மென இமாலயன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கோவிஷீல்ட் தடுப்பூசியானது அஸ்ட்ரா செனகா நிறுவனமும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்தது. அதன் தயாரிப்புகளை இந்தியாவின் ஷீரம் நிறுவனம் முன்னெடுக்கிறது.
“இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு முறையும் அதன் விநியோகத் தகமையும் எல்லா மக்களையும் இந்த நோயிலிருந்து காப்பாற்ற உதவும்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்துரைத்திருந்தார். அதனை இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஸ்ரீவஸ்தவா மீண்டும் வழியுறுத்தினர்.
இந்தியாவின், கொவிட் 19 தடுப்பூசிகளான பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை அவசர தேவைக்காக பயன்படுத்த அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
2 hours ago