Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதியோரத்தில் இறந்து கிடந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனை அறைக்கு கயிறு கட்டி இழுத்துச் சென்ற அவல சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அம்மாவட்ட சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் கூறுகையில், 'கடந்த புதன்கிழமை, பீகாரின் பெகுசாராய் மாவட்டம் லாகோ காவல் வட்டத்தில் உள்ள நிபானியா கிராமத்தில் சாலையோரம் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதை அடுத்து, சார்பு ஆய்வளார் பொறுப்பு வகித்து வரும் அனில் குமார் சிங், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவும், இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லவும் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
ஆனால், இறந்தவரின் உடல் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படவில்லை. இரண்டு துப்புரவுப் பணியாளர்களை கொண்டு அருகில் உள்ள பெகுசாராய் சாதர் மருத்துவமனைக்கு கயிறைக் கட்டி உடலை இழுத்துச் சென்றுள்ளனர்' என்று தெரிவித்தார்.
7 minute ago
11 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
11 minute ago