Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 24 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் சட்டவிரோத சுரங்கங்கள், குவாரிகள் செயல்பட்டு வருகின்றன . இந்த சட்டவிரோத சுரங்கங்களில் இருந்து கனிமங்கள், மணல் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன .
இதனிடையே, இந்த சட்டவிரோத சுரங்கங்கள், குவாரிகள் அமைந்துள்ள பகுதி இந்து மத கடவுள் கிருஷ்ணர் சிறுவயதில் விளையாடிய பகுதி எனவும் இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் சட்டவிரோத சுரங்கங்களை மூடவேண்டுமெனவும் கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி விஜய் ராகவ் தாஸ் என்ற சாமியார் பசோபா என்ற கிராமத்தில் போராட்டத்தை தொடங்கினார்.
பல மாதங்களாக அவர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், போராட்டத்தில் 550ஆவது நாளான கடந்த 20ஆம் திகதி சாமியார் விஜய் ராகவ் தாஸ் அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்தார். கடுமையான தீக்காயங்கள் அடைந்த சாமியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் ராஜஸ்தானில் இருந்து டெல்லி சப்தர்கஞ்ச் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சாமியார் ராகவ் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த சாமியார் விஜய் ராகவ் தாசின் உடல் அவரது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பர்சானா பகுதியில் தகனம் செய்யப்பட்டது.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago