2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

சிங்கங்களைப் பார்க்கச் சென்ற ஸ்டாலின்

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 06 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,11 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 9 வயது பெண் சிங்கம் இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தது. இதனிடையே, மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, வனத்துறை உயர் அதிகாரிகள் நேற்று  பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள், பூங்கா மருத்துவர்கள், தலைமை வன பாதுகாப்பு அதிகாரி யுவராஜ் ஆகியோர் விலங்குகளை பரிசோதித்தனர். அப்போது பூங்காவில் உள்ள சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளும், வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொற்று பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மற்ற விலங்குகளை தனிமைப்படுத்துவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பூங்கா ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .