A.K.M. Ramzy / 2021 மே 19 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லி
குழந்தைகளைத் தாக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படும் வைரஸ் சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதனை சிங்கப்பூர் அரசாங்கம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: சிங்கப்பூரில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உள்ளதாக கூறப்படும் கருத்தில் உண்மையில்லை. குழந்தைகள் உள்ளிட்ட கொரோனா தாக்கியவர்களிடம் நடந்த பரிசோதனையில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசான பி.1.617.2 வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதவில் கூறப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக் கப்பட்டு, அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த உருமாறிய வைரஸ், குழந்தைகளுக்கு பெருமளவு ஆபத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளதென டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
எனவே, சிங்கப்பூருக்கான விமான போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இந்தியாவில்இருந்து சிங்கப்பூருக்கு எந்த விமானமும் செல்லக்கூடாது. அங்கிருந்தும் விமானங்கள் வராமலும் தவிர்க்க வேண்டும்.
அடுத்ததாக, நம் நாட்டில், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கான வழிகளை ஆராய வேண்டும். குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளித்து, விரைந்து செயலாற்றினால் தான், அவர்களை காப்பாற்ற முடியும். என்றும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
7 minute ago
15 minute ago
42 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
42 minute ago
45 minute ago