2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சிறிய தவறால் எதுவும் நடக்கலாம்

Editorial   / 2022 ஜூலை 27 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமான பயணத்தின்போது ஒரு சிறிய தவறால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று உயர வரம்பை மீறிய கட்டிடங்களுக்கு எதிரான வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கருத்து கூறியது.

  மும்பை நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே நிர்ணயிக்கப்பட்ட உயர வரம்பை மீறி கட்டிடங்கள் கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டத்தரணி யஷ்வந்த் செனாய் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், " இந்த கட்டடங்கள் இங்குள்ள விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இது ஒரு நாள் விபரீத சம்பவங்களுக்கு வழிவகுக்கும்" என்றார்.

இந்த வழக்கு  தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி எம்.எஸ்.கார்னிக் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:-

 சமீபத்தில் அஜய் தேவ்கன் நடித்த "ரன்வே 34" திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. எந்த சம்பவமும் விமானியை பொறுத்தது இல்லை. அனைத்தும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை பொறுத்தது. நாம் விமானம் தரையிறக்கபோவதாகவோ அல்லது புறப்பட போவதாகவோ விமானி கூறுவதை நம்புகிறோம்.

வெளியில் வானிலை சீராக இருப்பதால் எல்லாம் நன்றாக செல்வதாக நம்புகிறோம். ஆனால் இது அனைத்து வேறு பல காரணிகளை பொறுத்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிறிய தவறு நடந்தால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X