2025 ஜூலை 26, சனிக்கிழமை

சீன எல்லையில் இந்திய பீரங்கிகளுக்கு புதிய கண்கள்

Freelancer   / 2022 ஒக்டோபர் 01 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன எல்லையிலுள்ள இந்திய இராணுவத்தின் பீரங்கித் திறன்களுக்கு இராணுவத்தின் தனுஷ் கன் சிஸ்டம், கே-9 வஜ்ரா, அல்ட்ரா லைட் ஹோவிட்சர்கள் என்பன வலுச் சேர்த்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு மேலதிகமான, பினாகா போன்ற நவீன ரொக்கெட் அமைப்புகளின் வரிசைப்படுத்தல்கள், இராணுவத்தின் துப்பாக்கிச் சக்தியின் நீண்ட தூரத் திறனுக்கு வலுவூட்டுகின்றன.

பீரங்கி துப்பாக்கிச் சூட்டின் துல்லியம் மற்றும் செயற்றிறனை மேம்படுத்த, அல்ட்ரா லைட் ஹோவிட்சர்களைக் கொண்டிருக்கும் திட்டங்கள் உள்ளதுடன், அவை 15 முதல் 20 கிலோ மீற்றர் குறுகிய தூரப் பிரிவில் 75-120 நிமிடங்கள் தாங்கும் திறன் கொண்டவை.

ட்ரோன் செங்குத்தாக உயருதல் மற்றும் தரையிறங்கும் திறனைக் கொண்டிருப்பதால் அவற்றுக்கு ஓடுபாதை தேவையில்லை.

ஸ்மெர்ச் ராக்கெட் லாஞ்சர் சிஸ்டம் 90 கிலோ மீற்றர் வீச்சைக் கொண்டுள்ளதுடன், பினாகாவின் நீட்டிக்கப்பட்ட வரம்பு 75 கிலோ மீற்றராகும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்திய இராணுவத்தின் சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர் துப்பாக்கிகளான கே9 வஜ்ரா, சீனாவுடனான இராணுவ மோதலுக்கு மத்தியில் லடாக்கில் நிலைநிறுத்தப்பட்டது.

கே9 வஜ்ரா, வெப்பமான பாலைவனங்களில் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. குளிர்காலத்தில் வெப்பநிலை மறை 30 டிகிரிக்கு குறையும் போது துப்பாக்கி அமைப்பு பல மாற்றங்களுக்கு உட்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிகள் குளிர்காலமயமாக்கல் கருவிகளுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் பூச்சியத்திற்கு குறைவான வெப்பநிலையில் மின்கலங்கள் செயற்படுவதையும் உராய்வு நீக்கிகள் உறையாமையும் உறுதிசெய்கிறது எனவும் நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது.

கடுமையான உயரமான நிலப்பரப்பில் உபகரணங்களின் இயக்கம் சரிபார்பார்க்கப்பட்டு, படைப்பிரிவு வடக்கு எல்லைகளில் அதிக உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அனைத்து வானிலைகளிலும் செயற்படும் பினாகா எனப்படும் பல்குழல் பீரங்கி அமைப்பு, 45 கிலோ மீற்றர் முதல் 70 கிலோ மீற்றர் வரை நீட்டிக்கப்பட்ட வரம்புக்குள் 44 வினாடிகளில் 72 ரொக்கட்டுகளை ஏவும் வல்லமை கொண்டது.

இது அம்பலப்படுத்தப்பட்ட எதிரி துருப்புக்கள், கவச மற்றும் மென்மையான தோல் வாகனங்கள், தகவல் தொடர்பு மையங்கள், விமான முனைய வளாகங்கள், எரிபொருள் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகள் போன்ற பல்வேறு பகுதி இலக்குகளுக்கு எதிராக அழிவுகரமான பதிலை வழங்கக்கூடியது.

அமெரிக்காவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட எம்777 அல்ட்ரா லைட் ஹோவிட்சர்கள் வடக்கு எல்லையில் சரிபார்க்கப்பட்டதாகவும் உள்நாட்டு தனுஷ் கன் சிஸ்டமானது, வடக்கு எல்லையில் அதிக உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X