2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சீனாவின் மற்றோர் ஆய்வுக் கப்பல் - இந்தியவை கண்காணிக்கிறதா?

Editorial   / 2022 நவம்பர் 06 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ள சீனாவின் மற்றோர் ஆய்வுக் கப்பல் இந்திய ஏவுகணை சோதனையை கண்காணிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.

சீனாவின் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5, இலங்கையில் சீனா குத்தகைக்கு எடுத்துள்ள ஹம்பந்தோட்​ை் துறைமுகத்துக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் வந்தது.

அங்கு ஒரு வாரம் இருந்த கப்பல், எரிபொருள் உட்பட தேவையான பொருட்களை நிரப்பிக் கொண்டு சென்றதாக கூறப்பட்டது. இந்தக் கப்பல் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறன் வாய்ந்ததால், இந்தக் கப்பலின் வருகைக்காக, இலங்கையிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்தது.

இந்நிலையில் சீனாவின் மற்றோர் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 6, இந்தியப் பெருங்கடல் பகுதியில் நேற்று முன்தினம் (04) நுழைந்துள்ளது. இது போர்ட் பிளேயரில் இருந்து 3,500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லம்பாக் ஜலசந்தியின் தென் பகுதியில் நிற்கிறது.

ஒடிசா அருகேயுள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பரிசோதிக்கப்படும் ஏவுகணைகளை கண்காணிக்க இந்தக் கப்பல் வந்ததாக ட்விட்டரில் தகவல் வெளியாயின. இந்தியாவின் ஏவுகணை பரிசோதனையை, சீனாவால் அதன் செயற்கைக்கோள்கள் மூலமே கண்காணிக்க முடியும். எனவே இந்தக் கப்பலின் வருகை, இந்திய பாதுகாப்பு துறையினருக்கு எந்த கவலையையும் அளிக்கவில்லை.

இதுகுறித்து இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வரும் 12-ம் திகதியும் மாத இறுதியிலும் செயற்கைக்கோள்களை ஏவ சீனா திட்டமிட்டுள்ளது. அதை கண்காணிப்பதற்காகவே சீன கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் முகாமிட்டுள்ளது’’ என்றனர். ஆனால், இந்தக் கப்பல் இலங்கை துறைமுகம் வரும் எந்த திட்டமும் இல்லை.

சீன கப்பல்கள் மலாக்கா, லம்பாக், ஓம்பாய் அல்லது வெடார் ஜலசந்திகள் வழியாகத்தான் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைய முடியும். இவை அனைத்தும் இந்தோனேஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதனால் மாற்று வழிகளை கண்டறிவதற்காக சீன ஆய்வுக் கப்பல்கள், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல் ஆழம் பற்றிய சர்வே பணிகளை அதிகரித்துள்ளன. ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைமுகம், சீன நிறுவனங்களின் பங்குகள் உள்ள ஐரோப்பிய துறைமுகங்களுக்கு சீன கப்பல்கள் செல்வதற்காக இந்தியப் பெருங்கடல் பகுதியில், மாற்று கடல் வழிகளை ஆராயும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றும் இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X