2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சூர்யாவுக்கு எதிராக தீர்மானம்!

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

மாணவர்களைக் குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வரும் நடிகர் சூர்யா, மத்தியஅரசாங்கம்  கொண்டுவரும் மக்கள் நல திட்டங்களை, உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார் என நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜக மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம், அக்கட்சியின் சென்னை தியாகராயநகரில் உள்ள தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்றது.

பாஜக மாநில இளைஞரணிச் செயலாளர்   தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் 'ஜெய்ஹிந்த்' எனும் வார்த்தையை இழிவுபடுத்திய திருச்செங்கோடு பேரவை உறுப்பினர் ஈஸ்வரனுக்கு கண்டனம் நிறைவேற்றப்பட்டது .

 மேலும், ஒன்றிய அரசாங்கத்தின்  மக்கள் நலத்திட்டம், சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பத்துக்காகத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார் நடிகர் சூர்யா. அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக இளைஞரணி சார்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X