2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் சொத்துகளுக்கு சீல்

Freelancer   / 2022 நவம்பர் 22 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான ஜமாத்-இ-இஸ்லாமிக்கு சொந்தமான 2.58 கோடி ரூபாய் மதிப்புள்ள பெரும் சொத்துக்களை மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) மீட்டுள்ளது.

சோபியான் மாவட்ட நீதவானால் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஒன்பது இடங்களில் உள்ள சொத்துக்களுக்கு சீல் வைத்துள்ள எஸ்ஐஏ, பயன்பாடு மற்றும் சொத்துக்களுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தியுள்ளது.
 
2022  ஜூலை 7இல் திகதியிட்ட ஷோபியான் மாவட்ட நீதவான் மூலம் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு, சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் பிரிவு 8 மற்றும் மத்திய உள்துறை அமைச்சின் 2019 பெப்ரவரி 28 திகதியிட்ட அறிவிப்பின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  
"இந்த வளாகங்கள் அல்லது கட்டமைப்புகள் சீல் வைக்கப்பட்டு, நுழைவதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வருமான பதிவேடுகளில் "ரெட் என்ட்ரி" செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் யூனியன் பிரதேசம் முழுவதும் 188 சொத்துக்களை எஸ்ஐஏ அடையாளம் கண்டுள்ளது, அவை மேற்கொள்ளப்படும் அடுத்த நடவடிக்கையின் போது அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிக்கையின்படி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஏனைய மாவட்டங்களில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமிக்கு சொந்தமான சொத்துக்களின் வரிசையில் முதலில் அறிவிக்கப்பட்ட ஷோபியான் சொத்துக்கள் மற்றும் ஷோபியான் ஜமாத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நடவடிக்கையானது ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத நிதியுதவியின் அச்சுறுத்தலை பெருமளவு வேரோடு பிடுங்கி எறிந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .