Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 06 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு விமான நிலையங்களில், பிராந்தியத்தின் திறமையான கைவினைஞர்களுக்கான இடமாக விமான நிலையம் என்ற இந்திய விமான நிலைய அதிகார சபையின் திட்டத்தின் மார்க்கெட் பிளேஸ் அமைப்பானது, கைவினைஞர்கள் தேசிய சந்தையில் வெளிப்படுவதற்கும் உள்ளூர் கைவினைஞர் சமூகத்தின் பொருளாதார நிலைமைகளை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது.
விமான நிலையங்களில் உள்ள இந்த விற்பனை நிலையங்கள் அனைத்து 20 மாவட்டங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துடன், மேலும் இந்த முயற்சி உள்ளூர் கலை மற்றும் ஜம்மு, காஷ்மீர் கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் சுய உதவி குழுக்களின் கைவினைஞர்களை ஆதரிக்கிறது.
இந்த விற்பனை நிலையங்கள் உள்ளூர் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சந்தைப்படுத்துவதற்கான தளமாக அமைகின்றன. ஒவ்வொரு இந்திய விமான நிலைய அதிகார இயக்கப்படும் விமான நிலையத்திலும் 100 முதல் 200 சதுர அடி பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு விமான நிலையங்களிலும் உள்ள சந்தையானது, சுய உதவி குழுக்களின் உறுப்பினர்களுக்கு பரந்த பார்வையையும் அவர்களின் தயாரிப்புகளுக்கு பரந்த விளம்பரத்தையும் வழங்குகிறது. மேலும், அதிக மக்களை சென்றடைகிறது மற்றும் பயணிகளுக்கு நியாயமான விலையில் கிராமப்புற கைவினை பொருட்களையும் கிடைக்கச் செய்கிறது.
சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு வழங்கப்படும் விற்பனையகம் மற்றும் கவுண்டர்கள் மூலம் ஒவ்வொரு வருடமும் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைகின்றனர்.
பயணிகளுக்கு மொத்தமாக முற்பதிவு செய்வதற்கும் பன்னாட்டு பரிசுகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட கோரிக்கைக்கும் இது ஒரு புள்ளியாக செயற்படுகிறது.
தொடக்க நிலைகளுக்கும் கைவினைப்பொருட்கள் தொடர்பான ஒப்பந்தங்களுக்கும் நிதியுதவி செய்யும் ஜேகேஆர்எல்எம் இனால் அனுசரணை வழங்கப்படும் 10 பேர் கொண்ட வெற்றிகரமான மகளிர் சுய உதவி கைவினைஞர்களின் குழுவின் நிறுவனர் புத்காமின் தாரக்சா என்பவராவார்.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தங்கள் கையால் தயாரிக்கப்பட்ட பொருட்களை 15 நாட்களுக்கு விற்பனை செய்வதற்கும் 9 இலட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தரக்ஷா கூறுகிறார்.
உலர் பழங்களின் பொதியிடல் மற்றும் தட்டுகள், கோப்பைகள், குவளைகள் மற்றும் அலங்காரத் துண்டுகளான மினியேச்சர் சமோவர், ஷிகாரா மற்றும் அதுபோன்ற பொருட்களை அவரது சுய உதவிக் குழு கையாள்கிறது.
குறித்த திட்டத்தின் கீழ் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 15 நாட்களுக்கு தங்கள் சுய உதவிக் குழுவுக்கு ஒரு தளம் வழங்கப்பட்டதாகவும் அதில் அவர்கள் ஒரே நாளில் 2 இலட்சம் ரூபாய் இலாபம் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
அசல் தன்மை, படைப்பாற்றல் மற்றும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்காமல் கவனம் செலுத்துவது வெற்றிக்கான திறவுகோல் என்று இளைஞர்களுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago