A.K.M. Ramzy / 2021 ஜனவரி 27 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கவுள்ளார்.
சென்னையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே 8ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.
இந்தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் கலந்துகொள்ள ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க குவிந்துள்ளனர்.
9 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
2 hours ago