2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

ஜெயலலிதாவின் மரணம்; வெளிவந்த உண்மைகள்; சசிகலா உட்பட நால்வர் சிக்கினர்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 19 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில், சசிகலா உட்பட 4 பேர் குற்றவாளிகள், என விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப்  பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டது.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பின்னர்  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்றைய தினம்(18)   தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த அறிக்கையில் ”சசிகலா,வைத்தியர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள் மீது விசாரணை நடத்த பரிந்துரை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையில் தான் போயஸ் கார்டனில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனவும் அவர் மயக்கமடைந்த பின்னர்  நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளனஎனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ”ஜெயலலிதா இறந்த நாள் மற்றும்  இறந்த நேரத்திலும் முரண்பாடு உள்ளது.  சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் திகதி நண்பகல்  3 மணி முதல் 3.30 மணி ஆகும். ஆனால் 5ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு  ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது.

இதனால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X