Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூன் 03 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிட்டு உள்ளார். இந்நிலையில் நாளை வாக்குகள் எண்ணப்பட இருப்பதால் தனது மனைவியும் பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமார் மற்றும் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர் நடிகர் சரத்குமார் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையங்களில் வைரலாகி வருகிறது. அதே விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சியின் சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். இதனால் விருதுநகர் தொகுதி ஸ்டார்ட் தொகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .