Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் தனியார் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தில் புதிய டீக்கடை ஒன்றை திறந்து உள்ளது. இந்த டீக்கடையில் டீ மாஸ்டர், பணியாளர்கள் கிடையாது. கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கியூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்தால் போதும் தங்களுக்கு விருப்பமான டீயை வாங்கி குடிக்கலாம்.
மேலும் தண்ணீர் பாட்டில் பிஸ்கட் உள்ளிட்டவையும் பெற்றுக் கொள்ளலாம். நவீன தொழில்நுட்பத்திலான டீக்கடையை ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.
இது குறித்து தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத்குமார் கூறுகையில்,
தற்போது டீ மாஸ்டர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும் டீ மாஸ்டர்கள் அதிக அளவில் சம்பளம் கேட்கின்றனர். தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் தேவையானதை எளிதாக வேண்டியதை விரும்பி சாப்பிடலாம்.
தற்போது ஆந்திரா தெலுங்கானாவில் ஒரே சமயத்தில் 600 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. விரைவில் நாடு முழுவதும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.
3 hours ago
17 Jul 2025
17 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
17 Jul 2025
17 Jul 2025