2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டெல்லியில் ராகுல் காந்தி கைது

Freelancer   / 2022 ஜூலை 26 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைநகர் டெல்லியில் பேரணியாக சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 18 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் வெளியேறிய காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அந்த பேரணியை விஜய் சவுக் பகுதியில் பொலிஸார், பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சாலையில் அமர்ந்து ராகுல்காந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.

தர்ணா போராட்டத்தை கைவிடும்படி பொலிஸார் கோரிக்கை விடுத்தபோதும் அந்த கோரிக்கையை ராகுல்காந்தி ஏற்க மறுத்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்று தர்ணா போராட்டத்தி ஈடுபட்ட ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களையும் பொலிஸார் கைது செய்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .