A.K.M. Ramzy / 2021 மே 23 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை யூனியனுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சிறுவர், சிறுமியர் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் தகவல் தெரிவித்து திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கொல்லப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 28) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்று திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு குழந்தைகள் நல அமைப்பினர் மற்றும் வடமதுரை உப பொலிஸ் பரிசோதகர் சுரேஷ் ஆகியோர் விரைந்து சென்றனர். அங்கு நடாத்திய விசாரணையில் சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்தது உறுதி என தெரிய வந்தது.
இதனையடுத்து இரு வீட்டாரையும் அழைத்து எச்சரிக்கை செய்ததுடன் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறினர்.
8 minute ago
23 minute ago
37 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
37 minute ago
47 minute ago