2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தடுப்​​பூசியால் 3 மாத குழந்தை மரணம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா கடலூர் மாவட்டம் அழகியநத்தம் பகுதியை சேர்ந்த 3 மாத ஆண் குழந்தைக்கு, கலையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

இன்று நள்ளிரவில் குழந்தைக்கு வயிறு உப்பியதாக கூறி, கடலூர் அரசு வைத்தியசாலையில்  குழந்தையை பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

இதற்கமைய குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 மேலும் கலையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தியதால் தான் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.  இதுதொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X