A.K.M. Ramzy / 2021 மே 24 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

உத்தரப் பிரதேசம்
கொரோனா வைரஸ் தடுப்பூசி போட, சுகாதார அதிகாரிகள் தங்கள் கிராமத்துக்கு வருகை தந்ததைக் கண்ட உத்தரப் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள சிசார்ஹா எனும் கிராமத்தில் உள்ள மக்கள், பயத்தின் காரணமாக அருகிலிருந்த சரயு நதியில் குதித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தடுப்பூசி அல்ல, 'விஷ ஊசி' என்று சிலர் சொன்னதால் தாங்கள் நதியில் குதித்து தப்பிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து தாம் எடுத்துக் கூறிய பின்பு, அந்த ஊரில் இருந்த 18 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக, ராம் நகர் துணை ஆட்சியர் ராஜீவ் குமார் சுக்லா தெரிவித்துள்ளார்.
இதேவேளை,பிகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தின் சௌஸா பகுதியில்உள்ள சௌஸா மயானத்தில் கங்கையின் கரையில் சடலங்கள் மிதப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், உன்னாவ் மற்றும் ஃபதேபூரில் நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஈமக்கிரியைகளுக்கு அதிக செலவு ஏற்படுமென்ற காரணத்தால் இறந்தவர்களை ஆற்றங்கரை மணலில் அடக்கம் செய்வதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago