2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தடுப்பூசி சான்றிதழை காண்பித்தால் மட்டும் மது வழங்கப்படும்!

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே மதுக்கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதுக்கடைகளில் மது வழங்கப்படுவது, குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மதுக்கடைகளில் விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் மதுபானம் வாங்குபவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்பதை உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தாதோருக்கு மது விற்றால் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .