2026 மார்ச் 07, சனிக்கிழமை

தண்டோரா போட்டு வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியில் வீதி, வீதியாக தண்டோரா போட்டு வாக்குறுதிகளை கூறி பாமக வேட்பாளர் கஸ்ஸாலி பிரசாரம் மேற்கொண்டார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பெசன்ட் சாலை, நடேசன் சாலை, ஐஸ்ஹவுஸ் போன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கஸ்ஸாலி நேற்று துண்டுப்பிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தார். தொடர்ந்து ‘டிரம்ஸ்’ இசைக்கருவியை கழுத்தில் மாட்டிக்கொண்டு தண்டோரா போல அதை இசைத்தவாறு வாக்குச் சேகரிப்பில் ஈடுப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .