2025 ஜூலை 26, சனிக்கிழமை

தந்தையைக் கொன்ற மகள்; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 11 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் நகரைச் சேர்ந்தவர்  சந்தோஷ் குமார். இவர் தனது மகளான சுமன் என்பவருக்குத்  திருமணம் செய்து வைக்க வரன் தேடிவந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் காணாமற் போயுள்ளார்.

இதனால் அவரது குடும்பத்தினர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுபற்றி தீவிர விசாரணை நடத்திய பொலிஸார் , சந்தேகத்தின்பேரில், அக் கிராமத்தில் வசித்து வந்த  ரவீந்திர குமார்  (வயது 40) என்பவரை விசாரித்துள்ளனர்.

இதன்போது சுமன், திருமணம் ஆனவரான ரவீந்திர குமாருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளமை  தெரிய வந்துள்ளது.

அத்துடன் இதனை அறியாத சுமனின் தந்தை,  தனது மகளுக்கு வரன் தேடியுள்ளார் எனவும், இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திர குமார் சந்தோஷை கொலை செய்ய சுமனுடன் இணைந்து திட்டமிட்டுள்ளார் எனவும்

இதன்படி சந்தோஷை க் கொலை செய்துஅவரது  உடலைக்   கழிவறைக் கழிவு நீர் குழாய் ஒன்றிற்குள் மறைத்து வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ரவீந்திர குமாரின் மகன் கௌதம் கவுர் என்பவரும் உதவியாக இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ் வழக்கில் ரவீந்திர குமார் , அவரது மகன் மற்றும் சுமன் ஆகிய 3 பேரையும் பொலிஸார்  கைது செய்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X