A.K.M. Ramzy / 2021 மே 27 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தருமாறு மத்திய அரசாங்கத்திடம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை முழுமையாக தமிழகஅரசாங்கத்துக்கு மத்திய அரசாங்கம் குத்தகையாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் அங்கு உடனடியாக தடுப்பூசி தயாரிப்பை தமிழக அரசாங்கத்தால் தொடங்க முடியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்துடன் டெல்லி வந்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாராளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக குழுத் தலைவர் டி.ஆர். பாலுவுடன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக அரசாங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து ஒரு வாரத்தில் மத்திய அரசாங்கம் பதில் தரும் என்று அமைச்சர் கூறினார்," என்று தெரிவித்தார்.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago