2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

தமிழகத்தில் தேச விரோத சக்திகளின் எழுச்சி!

A.K.M. Ramzy   / 2021 மே 30 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை

2019ஆம் ஆண்டுக்கு முந்தைய காஷ்மீர் வகை தேச விரோத சக்திகளின் எழுச்சி அச்சுறுத்தலில் தமிழகம் உள்ளதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திராவிட முன்னேற்ற கழக  தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம்  குறித்து கடந்த சில நாட்களாகவே பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசாங்கம் கலைக்கப்படும் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். அதேபோல், தமிழகத்தில் புதிய ஆட்சி ஆரம்பமாகிய சில நாட்களிலேயே அது, ஜெர்மனியின் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துவதாகவும் கூறியிருந்தார்.

 இந்நிலையில், இன்று (மே 30) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: 2019ஆம் ஆண்டுக்கு முந்தைய காஷ்மீர் வகை தேச விரோத சக்திகளின் எழுச்சியின் அச்சுறுத்தலில் தமிழகம் இன்று உள்ளது.

தமிழக முதல்வர் இது தொடர்பாக ரோ அமைப்பு, உளவுத் துறைக்கு ஆவணம் வழங்க வேண்டும். மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவதற்கு பதிலாக, மத்திய அரசாங்கம் சி.ஆர்.பி.எப் மற்றும் பி.எஸ்.எப் மத்திய படைகளை மதுரைக்கு  அருகிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பதிவு, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .