A.K.M. Ramzy / 2021 ஜூன் 03 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூணாறு :
கேரள மாநிலம், தேவிகுளம் தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ராஜா, இரண்டாம் முறையாக நேற்று சபாநாயகர் முன்னிலையில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
அவர், கடந்த மே மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், தமிழில் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தில் பிழை இருப்பதாக கண்டறியப்பட்டது. உறுதி மொழியின் இறுதியில், 'உளமாற உறுதியளிக்கிறேன்' என்பதற்குப் பதில் உறுதியளிக்கிறேன் என முடித்துக் கொண்டார்.
இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், அவர் மீண்டும் பதவி பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் கேரள சபாநாயகர் ராஜேஷ் முன்னிலையில், எம்.எல்.ஏ., ராஜா, மீண்டும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
15 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago