Freelancer / 2025 மே 26 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாஜ்மஹாலுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வான்வெளியில் ஏற்படும் ஆபத்துகளை திறம்பட சமாளிக்க அதிநவீன டிரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏசிபி சையத் அரிப் அகமது கூறுகையில்,
தாஜ்மஹால் வளாகத்தில் டிரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்படும், இது 7 முதல் 8 கிலோமீட்டர் வரம்பிற்குள் செயற்படும்.
இந்த அமைப்பு தற்போது பிரதான கோபுரத்திலிருந்து 200 மீட்டர் வரம்பிற்குள் திறம்பட இயங்கும் என்றும், ஏதேனும் டிரோன் இந்தப் பகுதிக்குள் நுழைந்தால், அது அதன் சிக்னல்களைக் கண்டறிந்து தானாகவே அதை ஜாம் செய்து, அதைச் செயல்படாமல் செய்துவிடும் என்றும் அவர் விளக்கினார்.
இந்த டிரோன் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாடு குறித்து பொலிஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களில் தாஜ்மஹாலும் ஒன்றாகும். இங்கு பாதுகாப்பு தற்போது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) மற்றும் உ.பி. பொலிஸாரால் கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் அதிநவீன டிரோன் நியூட்ரலைசேஷன் அமைப்பை நிறுவ அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான தகுந்த ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
11 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago