2025 ஜூலை 26, சனிக்கிழமை

தாயின் கண்முன்னே சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமி ஒருவர் தனது தாயின் கண்முன்னே,  கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்,  ஜார்கண்ட் மாநிலத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த  சிறுமியும், அவரது தாயும் அண்மையில் விழாவொன்றில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதன்போது மதுபூர் பகுதியில் வைத்து  இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 மர்ம நபர்கள் அவர்கள் இருவரையும் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

அத்துடன் அச்சிறுமியை அவரது தாயின் முன்னிலையில் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், இது தொடர்பில் இருவரைக் கைது செய்துள்ளனர் எனவும் மூவரைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X