2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

திணறடிக்கும் காற்று மாசு

Editorial   / 2022 நவம்பர் 03 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசு தலையாய பிரச்சினைகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. புதுடெல்லியின் காற்றின் தரம் தீபாவளி  பண்டிகையின்போது ‘மிகவும் மோசம்’ என்ற குறியீட்டை எட்டியது.

புதுடெல்லி அரசும் காற்று மாசை தவிர்க்க காற்று சுத்திகரிப்பு கோபுரம் என பல முயற்சிகளை செய்து வருகிறது. இருந்தபோதிலும், தற்போது காற்றின் தரம் மோசமானதையடுத்து புதுடெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைநகரில் உள்ள மக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அலுவலக பணி செய்ய வேண்டும், வாகன மாசுபாட்டைக் குறைக்க பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ‘முடிந்த அளவிற்கு வீட்டிலிருந்து பணி செய்யவும், கார் போன்ற சொந்த வாகனங்களை வெளியே எடுப்பதை சிறிது காலத்துக்கு மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 50 சதவீத மாசு வாகனங்களால்தான் ஏற்படுகிறது’ என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X