A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா எனத் தகவல் வெளியானது வதந்தி என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில் 10ஆவது முறையாக திமுக சார்பில் போட்டியிட்டுள்ளார். தனது 82ஆவது வயதிலும் தன் தொகுதி மற்றும் பல்வேறு தொகுதிகளிலும் திமுகவுக்காக பிரசாரம் மேற்கொண்டார். மேலும், கட்சிப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து, மருத்துவமனை ஒன்றில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
அவருக்கு நெகட்டிவ் என்றே பரிசோதனையில் வந்ததாக, துரைமுருகன் தரப்பிலும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. துரைமுருகனுக்கு கொரோனா என்ற தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்தனர்
9 minute ago
24 minute ago
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
38 minute ago
48 minute ago