A.K.M. Ramzy / 2021 மார்ச் 31 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜபாளையம்
''10 ஆண்டுகளாக ஜெயலலிதா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். 5 ஆண்டுகள் அவரின் அமைச்சரவையில் இருந்திருக்கிறேன் என் தெரிவித்த அமைச்சரும், ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ராஜேந்திரபாலாஜி உரையாற்றுகையில் தெரிவிக்கையில் ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது ஜெயலலிதா அனைவரையும் வணங்கி விட்டுத்தான் செல்வார். ஆனால், அன்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, யாரின் செயலோ தெரியவில்லை. எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டுச் சென்றார். ஜெயலலிதாவின் வார்த்தைகள் வெல்ல வேண்டும்.
ஜெயலலிதாவின் கடைசி நிகழ்ச்சி குறித்துப் பேசிக் கொண்டிருந்த அமைச்சரும், ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜி, ஒருகட்டத்தில் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார்.
அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் இரவு பேசும்போது,
பல்வேறு வருடங்களுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் எனக்குச் சிறிதாக அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது ஜெயலலிதா, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரையும் அழைத்து, 'ராஜேந்திர பாலாஜிக்குத் திருமணமாகவில்லை. அதனால் அவருடன் இருங்கள்' என்று அனுப்பி வைத்தார்.
இதை ஏன் இப்போது சொல்கிறேன் தெரியுமா? ஜெயலலிதா இல்லை என்று யாரும் நினைத்து விடாதீர்கள். அவர் எல்லோரின் இதயத்திலும் இருக்கிறார்'' என்று ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
5 minute ago
15 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
4 hours ago