A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 2 மணிக்குள் முழுமையான முடிவுகள் வெளியாகும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இந்த இருகட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
மொத்தமுள்ள 153 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு முடிவு தெரிந்த 8 இடங்களையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. இதேபோல் 1,421 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு முடிவு தெரிந்த 266 இடங்களில் திமுக- 198, அதிமுக - 28, காங்கிரஸ்- 7, இந்தியக் கம்யூனிஸ்ட்- 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 2, தேமுதிக - 1 பாமக உள்ளிட்ட மற்றவை 29 இடங்களைக் கைப்பற்றின.
9 மாவட்டங்களில் இன்னும் சில இடங்களில் முடிவுகள் வெளிவராமல் உள்ளன. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
35 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026