2025 ஜூலை 26, சனிக்கிழமை

தொடரும் குளியலறை வீடியோ சர்ச்சை: வலுக்கும் மாணவிகளின் போராட்டம்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள விடுதியொன்றில் மாணவிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, அதனை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளதாக  அவ்விடுதியைச் சேர்ந்த பெண்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் ‘இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த போதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை‘  எனக் கூறி யமாணவிகள் கடந்த 29 ஆம் திகதியிலிருந்து  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டம் வலுத்துள்ள நிலையில் குறித்த விடுதி ஊழியரைக்  கைது செய்த பொலிஸார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதாகவும், அவரது தொலைபேசியை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

சில நாள்களுக்கு முன்னர் , சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில், மாணவி ஒருவர், ஏனைய மாணவிகள் குளிக்கும்போது ஆபாசமாக வீடியோ எடுத்து, பலரிடம் பகிர்ந்ததாகக்  குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால், பொலிஸார் தரப்பில், அப் பெண்ணின் வீடியோவை மட்டுமே அவர் மற்றொருவரிடம் பகிர்ந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

 இவ்  வழக்கில், அப் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தமை   குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X