A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவை
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கோவை மாவட்டத் தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டுமென கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு முதலாவது இணை இயக்குநர் எஸ்.வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை மாநிலம் முழுவதும் தொழிலாளர்களுக்கு பொது விடுமுறை அளித்து, ஏற்கெனவே தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிப்பது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .