2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

நடன மேடையாக மாறிய சிகிச்சை மையம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 04 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் மும்பையிலுள்ள நிஸ்கோ கொரோனா சிகிச்சை மையமானது நிறுவப்பட்டு ஓராண்டு பூர்த்தியடைந்ததை முன்னிட்டு,  அங்குள்ள சிகிச்சைப் பிரிவொன்றில் நடன நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் பாதுகாப்பு உடையணிந்து நோயாளிகளுடன்  உற்சாகமாக நடனமாடியுள்ள வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.



கொரோனாவால் உள ரீதியாகப்  பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை உற்சாகப்படுத்தவே இந்த நடன நிகழ்ச்சியானது  ஏற்பாடு செய்யப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .