2025 ஜூலை 26, சனிக்கிழமை

நடனம் ஆடிய இளைஞர் மரணம்; தகவல் அறிந்த தந்தையும் மரணம்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ‘கர்பா‘ என்ற நடன நிகழ்ச்சி  இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்வின் போது மக்கள் அனைவரும் அரங்கில் ஒன்று திரண்டு வட்டமிட்டு நடனமாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்திலுள்ள  விரார் என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற ‘கர்பா‘ நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த 35 வயதான மனிஷ் என்பவர்   திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து மனிஷை உடனடியாக அவரது தந்தையும் அங்கிருந்த சிலரும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ”மனிஷ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தையும் மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ”இருவரும் இருதயக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளனர்” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X