2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நடுவானில் தடுமாறிய பயணி

Freelancer   / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி விமான நிலையத்திலிருந்து நேற்று நள்ளிரவு(19) சென்னை விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று அவசரகால கதவை திறக்க பயணியொருவர் முயற்சித்துள்ளார்.

இதனை அறிந்த விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்த அலறி கூச்சலிட்டுள்ளனர். விமானம் தரையிறங்கியதும், சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானி அளித்த புகாரை தொடர்ந்து, நடுவானில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியின்மேல்பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X