2026 மார்ச் 07, சனிக்கிழமை

நடுவானில் நடந்த திருமணம்

Editorial   / 2021 மே 24 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை அதிபர் மகன் ராகேஷ்ஷுக்கும், தொழிலதிபர் மகள் தீக்சனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட பெற்றோர்கள், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன் பதிவு செய்தனர்.

அதன்படி நேற்று காலை 7.30 மணியளவில் மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் 161 பேருடன் அந்த விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது.

விமானத்தில் சென்ற அனைவருக்கும் கொரோனாத்  தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொண்டனர்.

அந்த விமானம் நடுவானில் சென்றபோது உறவினர்கள் மத்தியில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். பின்னர் அந்த விமானம் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

கடலுக்கு அடியில் திருமணம், பாராசூட்டில் பறந்து கொண்டு திருமணம் என இதுபோன்ற சம்பவங்களை வெளிநாடுகளில் நடப்பதை மாத்திரமே கேள்விப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் மதுரையில் இதுபோன்ற திருமணம் நடந்தது ஆச்சரியப்படும் வகையில் அமைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .