Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஒக்டோபர் 29 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி கலாச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில், புத்தக கலாச்சாரம் உதயமாகி வருகிறது. தமது முன்னவர்களின் பாதையில் ஏமாற்றமும் வேதனையும் மட்டுமே உள்ளது என்பதை யூனியன் பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். வாழ்நாள் முழுவதும் துயரத்தில் முடிவடையும் ஒரு போரை இனி அவர்கள் நம்ப முடியாது.
போட்டிப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்கள், பழங்குடியினர் மற்றும் குஜ்ஜார் மக்கள் அடிக்கடி இடம்பெயர்வதைக் கருத்தில் கொண்டு பாடசாலைகள் போன்ற பல்வேறு கல்வி முயற்சிகளை அரசாங்கம் தொடங்கியுள்ளதால், வாழ்க்கை மீதான சிறந்த இரசனையை இளைஞர்கள் இப்போது வளர்த்துக் கொண்டுள்ளனர்.
கல்வியே தமது வாக்கையை உயர்த்தும் என்பதை உணர்ந்துள்ள இளைஞர்கள் அனைத்து கல்வி வாய்ப்புகளையும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கைப்பற்றி வருகின்றனர்.
கடந்த மாதம் சோபியான் மாவட்டத்தின் டென்ஸ் கிராமத்தைச் சேர்ந்த பழ வியாபாரியின் மகனான ஹசிக் பர்வீஸ் லோன், யூனியன் பிரதேசத்தில் 200 நீற் பரீட்சையில் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று மாகாணத்தில் முதலிடமும் நாட்டிலேயே 10ஆவது இடத்தையும் பெற்றார்.
துர்க்வாம்காம் கிராமத்தில் (ஷோபியான்) உள்ள தனது இடைநிலை மற்றும் மேல்நிலை அரச ஆசிரியர்களுக்கு அவர் தனது சாதனையைப் பாராட்டுகின்றனர்.
மிக நீண்ட காலத்துக்கு முன்னர் போராளிகள் அணியில் இளைஞர்கள் சேருவதற்குப் பெயர் போன மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹாசிக், என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தால் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள், முக்கியத் தொழில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ஆகியவற்றை பார்வையிட மாணவர்களுக்கு உணவு மற்றும் விமான டிக்கெட் மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு, 5 நாள் பாரத் தர்ஷன் சுற்றுப்பயணம் வழங்கப்பட்டது.
ஒரு கண் திறக்கும் மற்றும் வாழ்க்கையை மாற்றும் பயணமாக இது அமைந்துள்ளதுடன், பரந்த உலகக் கண்ணோட்டத்தை முன்னோக்கிக் கொண்டு கடினமாகப் படிக்க இது அவர்களை ஊக்குவித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஷோபியானைச் சேர்ந்த குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்த ஜபீனா பஷீர், நீற் தேர்வில் முதல் முயற்சியிலேயே 423 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்று, தன்னை ஊக்குவித்து, இந்த சாதனைக்கு அனைத்து படிகளிலும் வழியமைத்த அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்..
தொலைதூர இடங்களில் பணியமர்த்தப்பட்ட இந்திய இராணுவத்தினர், குஜ்ஜார் மாணவர்களுக்கு ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயரும் மாற்று ஆசிரியர்களாகவும் செயல்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பழங்குடியினர் விவகாரத் துறை சமீபத்தில் ஜம்முவில் பெண் மாணவர்களுக்காக 100 படுக்கைகள் கொண்ட விடுதியை அமைத்தது.
விடுதிகளில் அனைத்து நவீன வசதிகளும், மானிய விலையில் உணவும் வழங்கப்படும் என்பதுடன், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் முன் ஏற்றப்பட்ட கல்வி உள்ளடக்கத்துடன் டெப்லட்களும் வழகப்பட்டன.
யூனியர் பிரதேசத்தில் பழங்குடிப் பகுதிகளில் உள்ள 120 பாடசாலைகளுக்கான நவீனமயமாக்கல் திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்தின் முதல் கட்டமாக, 20 கோடி ரூபாய் செலவில் 100 பாடசாலைகள் ஏற்கனவே நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
மேலும், யூனியர் பிரதேசம் முழுவதும் 1,65,000 மாணவர்கள் பல்வேறு பாடசாலைகளில் சேர்ந்துள்ளனர் என்பதுடன், அவர்களில் 80 சதவீதம் பேர் இதற்கு முன்னர் பாடசாலைகளுக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
714 அரச பாடசாலைககளைச் சேர்ந்த 70,000 பாடசாலை மாணவர்களுக்கு 14 வகையான தொழில்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த முன்முயற்சியை செயல்படுத்த 803 தொழிற்கல்வி ஆய்வகங்கள் உள்ளதுடன், மேலும் 1122 புதிய ஆய்வகங்கள் மற்றும் 1,352 ஸ்மார்ட் வகுப்பறைகள் நடப்பு நிதியாண்டில் நிர்மானிக்கப்படுகின்றன.
பாடசாலை பட்டதாரி மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக எச்சிஎல் டெக்பீயுடன் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தேசியக் கல்விக் கொள்கையின் ஆலோசனையின்படி மாணவர்களிடையே படைப்பாற்றல், அறிவியல் மனப்பான்மை மற்றும் தொழில் முனைவோர் மற்றும் தார்மீகத் தலைமைத்துவத்தை வளர்ப்பதே இதன் யோசனை என்று லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார்.
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago