Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 19 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்திரபிரதேசம் லக்னோ - காசிபூர் மாவட்டங்களை இணைக்கும் பூர்வாஞ்சல் வீதியில், கடந்த 15 ஆம் திகதி BMW காரொன்று கனரக வாகனமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இக் கோரவிபத்தில் காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் இவ்விபத்து ஏற்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் அவர்கள் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட லைவ் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மருத்துவக் கல்லூரி பேராசிரியரான ஆனந்த் பிரகாஷ் என்பவரே அக் காரைச் செலுத்தியுள்ளார். அவருடன் அவரது நண்பர்கள் மூவர் சுல்தான்பூரிலிருந்து டெல்லியை நோக்கிப் பயணித்துள்ளனர்.
இதன்போது ஒருவர் ஃபேஸ்புக்கில் நேரலையில் வந்துள்ளார். அதில் 100 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் காரின் வேகத்தை பிரகாஷ்அதிகரிப்பதும், ஒரு கட்டத்தில் 220 கிலோ மீற்றர் வேகத்தை தொட்டதும், அவரிடம், 300 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லுமாறு ஒருவர் கூறுவது பதிவாகியுள்ளது.
அத்துடன் மற்றுமொரு நபர் ”வேகத்தை குறைக்குமாறும், நாம் சாகப்போகின்றோம் ”என்று கூறுவதும் அவரை பொருட்படுத்தாமல் பிரகாஷ் காரை வேகமாகச் செலுத்துவதும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த ஃபேஸ்புக் நேரலை நிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, அக்காரானது எதிரே வந்த கனரக வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து கனரக வாகனத்தின் சாரதி தப்பிச்சென்றுள்ள நிலையில், இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago