Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஜூலை 05 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை
'குழந்தைகளை வளர்க்க தாமார்கள் சிரமப்படுவர் எனக் கருதியே, 'தத்து' கொடுக்க முடிவு செய்தேன். அதற்கு பணமும் கிடைத்ததால், பிரித்து எடுத்துக் கொண்டோம்' என மதுரை இதயம் அறக்கட்டளை நிறுவனர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரை ஆயுதப்படை மைதான வளாகத்தில் இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்த மேலூர் சேக்கிப்பட்டி ஒரு தாயின் 1 வயது மகனும், பெங்களூர் தாயின் 2 வயது மகளும், கொரோனாவால் இறந்ததாக கூறி பணத்துக்கு விற்றனர்.குழந்தைகளைத் தத்து எடுத்த இரண்டு தம்பதி, இரு தரகர்கள் உட்பட இல்ல ஒருங்கிணைப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த இல்ல நிறுவுனர், ஊழியரும் போடி ரங்கநாதபுரத்தில் கைது செய்யப்பட்டனர். நிறுவுனர் வாக்குமூலம்:ஓராண்டாகவே கொரோனா காரணமாக எங்கள் இல்லத்துக்கு பலசரக்கு பொருட்கள் உள்ளிட்டவைகளை பலர் தந்து உதவினர். பணமாக தருவதை நாங்கள் பிரித்துக் கொள்வோம். எங்கள் இல்லத்துக்கு வந்த இரண்டு தாய்களின் நிலைமையைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. குழந்தையை வளர்க்க அவர்கள் சிரமப்படுவர் எனக் கருதி தத்து கொடுக்க முடிவு செய்தேன். அதற்கு பணமும் கிடைத்ததால் வந்ததை ஏன் விட வேண்டும் என பெற்றுக் கொண்டேன். இவ்வாறு நிறுவுனர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago