2025 ஜூலை 26, சனிக்கிழமை

நித்யானந்தாவின் சாயலில் இருந்ததால் விபரீதம்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நித்யானந்தா என நினைத்து, அவரது  சாயலில் இருந்த மற்றுமொரு சாமியாரின் ஆசிரமம், மக்களால்  இடித்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ‘சாமியார் பாஸ்கரானந்தா‘. இவர் ‘காரணம்பேட்டை ‘ அருகே ஆசிரமம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர்  நித்தியானந்தாவில் சாயலில் இருப்பதால்,  அவர்தான் நித்தியானந்தா  என நினைத்து அப்பகுதி மக்கள் சிலர் அவரது ஆசிரமக் கட்டிடங்களை முழுமையாக இடித்து சேதப்படுத்தியுள்ளனர் எனவும், ஆசிரமத்தில் இருந்த 25 பவுன் தங்க நகைகளைச் திருடிச் செற்றுள்ளனர் எனவும்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கைகளை  எடுக்குமாறு அவர் பொலிஸ் நிலையத்தில்  நேற்றுமுன்தினம்  புகார் அளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X