2025 ஜூலை 26, சனிக்கிழமை

நிர்வாண வீடியோ அழைப்பால் வங்கி அதிகாரிக்கு நேர்ந்த விபரீதம்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத்தைச்  சேர்ந்த 64 வயதான  ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவருக்கு, அண்மையில் வாட்ஸ்-அப்பில் ஒரு பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது.

 இதனைத் தொடர்ந்து இருவரும் குறுஞ்செய்தி ஊடாக உரையாடி வந்த நிலையில்,  அவர்களது தொடர்பாடல் திடீரென ஆபாசமாக மாறியுள்ளது.

இதனையடுத்து அப்பெண் வீடியோ அழைப்பினை ஏற்படுத்தி,  குறித்த வங்கி அதிகாரியுடன்  நிர்வாணமாக உரையாடி வந்துள்ளதுடன், அதனைப்  பதிவு செய்து, அவ் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி அவரிடமிருந்து சுமார் 17.8 லட்சம் ரூபாய்  பணத்தைப் பறித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப் பெண் மீண்டும் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதால்,  அச்சமடைந்த அவர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து இது குறித்துப்  பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X