2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

’நீங்கள் எதற்காக இறந்தீர்கள் என்பது நினைவிருக்கிறது’

Freelancer   / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

1947ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தான் தாக்கிய பின்னர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்து மற்றும் சீக்கிய இனப் படுகொலையை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் நினைவுபடுத்துகிறது.

மிர்பூர் மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 100,000 இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டும், தலை துண்டிக்கப்பட்டும், மண்டை ஓடுகள் கற்களால் நசுக்கப்பட்டும் மரணதண்டனை பாணியில் உயிர்களை இழந்தனர்.

அவர்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதே அவர்கள் செய்த குற்றம்.

1947 நவம்பர் 25 முதல் பாகிஸ்தானும் பழங்குடியினரான லஷ்கரும் நுழைந்து பின்னர் ஜம்முவின் மேற்குப் பகுதிகளை மிர்பூரிலிருந்து கைப்பற்றியதில் இருந்து இந்து மற்றும் சீக்கிய சமூகங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியங்களைப் பற்றி பால் கே. குப்தா எழுதிய சுயசரிதையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.

குப்தாவுக்கு அப்போது 6 வயதுதான் என்ற போதும், அந்த இனப்படுகொலையின் கொடூரம் அவரது வாழ்நாள் முழுவதும் அவரது நினைவிலிருந்து அழிக்க முடியாத அளவுக்கு இருந்தது. 

1358இல் டெல்லியில் நடந்த தைமுர்லேன் படுகொலைக்குப் பின்னர், 1947 நவம்பர் 25இல் நடத்தப்பட்ட மிர்பூர் படுகொலையானது இந்திய வரலாற்றில் நடந்த மிக மோசமான படுகொலை என்று குப்தா எழுதியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போது, மிர்பூர் நகரத்தின் மொத்த இந்து மற்றும் சீக்கிய மக்கள் தொகை கிட்டத்தட்ட 25,000 ஆக இருந்தது. 

பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பழங்குடி பதான்களால் நகரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பின்வாங்கிய இராணுவத்துடன் சுமார் 2,500 பேர் ஜம்முவுக்கு தப்பிச் சென்றனர்.

மேலும் 2,500 பேர் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலால் கொல்லப்பட்டனர் அல்லது அவர்களது வீடுகள் தீ வைக்கப்பட்டதன் மூலம் உயிருடன் எரிக்கப்பட்டனர். 

மீதமுள்ள 20,000 பேர், சாந்த் சுந்தர் சிங்கால் கட்டப்பட்டு சிறை முகாமாக மாற்றப்பட்ட அலி பெய்க்கு மரண அணிவகுப்புக்கு தள்ளப்பட்டனர்.

அலி பெய்க் செல்லும் வழியில் குறைந்தது 10,000 இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பாகிஸ்தான் துருப்புக்கள் மற்றும் பழங்குடி பதான்களால் தூக்கிலிடப்பட்டனர். 

5,000 பெண்கள் கடத்தப்பட்டனர். பால் கே குப்தாவுடன் 5,000 இந்து மற்றும் சீக்கியர்கள் மட்டுமே பயங்கரமான 20 மைல் நடைப் பயணத்துக்குப் பிறகு அலி பெய்க் சிறைச்சாலைக்கு வந்தனர்.

1948 மார்ச்சில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அலி பெய்க்குக்கு வந்தபோது 1,600 பேர் மட்டுமே தப்பிப்பிழைத்தனர், அவர்கள் ராவல்பிண்டிக்கும் பின்னர் ஜம்முவுக்கும் மாற்றப்பட்டனர்.

அங்கு அவர்களும் அவர்களது குழந்தைகளும் 2019 ஓகஸ்ட் 5 வரை 75 ஆண்டுகளாக அகதி முகாம்களில் தங்கியிருந்தனர். இந்திய குடிமக்களாக அவர்களுக்கு சம உரிமை வழங்கும் 35ஏ இரத்து செய்யப்பட்டது.

1947 நவம்பரில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசாங்கத்துக்கு, பாகிஸ்தான் துருப்புக்களைப் பற்றி எச்சரிக்கை செய்ய இந்து மற்றும் சீக்கிய தலைவர்களால் பல முயற்சிகள் மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் பலனளிக்கவில்லை.

நவம்பர் 13 அன்று, ராம்லால் சவுத்ரி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.சி. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய பிரதமராக இருந்த மகாஜன், புதுடெல்லியில் நேருவைச் சந்திக்கப் பயணம் செய்தனர். 

பாக். ஆக்கிரமிப்பு பகுதிகளில் சிக்கியுள்ள சுமார் 100,000 இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை மீட்க உதவுமாறு காஜன் நேருவிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டார் என்று குப்தா எழுதியுள்ளார்.

'நவம்பர் 15 ஆம் திகதி, ஜம்மு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நேருவைப் பார்க்க திரண்டிருந்த போதும், அவர் நேராக காஷ்மீர் பள்ளத்தாக்குக்குச் சென்றார்'. (குப்தா 2011).

நவம்பர் 23 அன்று, பிரேம் நாத் டோக்ரா மற்றும் பேராசிரியர் பால்ராஜ் மதோக் ஜம்முவில் உள்ள இந்திய இராணுவத்தின் படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் பரஞ்ச்பேவை சந்தித்து மிர்பூருக்கு படைகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். "ஜம்மு காஷ்மீரில் எங்கும் இந்திய துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கு ஷேக் அப்துல்லாவுடன் ஆலோசனை கட்டாயம் என்று பிரிகேடியர் பரஞ்ச்பே அவர்களிடம் கூறினார்." (குப்தா 2011).

நவம்பர் 24 அன்று, இனப்படுகொலை தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக, "பண்டிட் டோக்ராவும் பேராசிரியர் மதோக்கும் ஜம்மு விமான நிலையத்தில் பண்டிட் நேருவைச் சந்தித்து மிர்பூரில் உள்ள நெருக்கடியான சூழ்நிலையைப் பற்றி அவரிடம் சொன்னார்கள்." இந்த நிலையில், நேரு பொறுமை இழந்து,"ஆத்திரத்தில் பறந்து, ஷேக் அப்துல்லாவிடம் பேச வேண்டும்" என்று சத்தம் போட்டார். (குப்தா 2011).

ஆதரவற்ற இந்து மற்றும் சீக்கியக் குடும்பங்கள் இந்தியப் படைகளுக்காகக் காத்திருந்ததால், 1947 நவம்பர் 25 அன்று மிர்பூர் வீழ்ந்தது.

மிர்பூரில் நடந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் இனப்படுகொலையானது இந்தியாவின் வடபகுதிகளையும் பீகார் மற்றும் வங்காளத்தையும் சூழ்ந்திருந்த வகுப்புவாத சீற்றத்தின் நேரடி விளைவாகும். 

மிர்பூரின் உண்மையான இந்து மற்றும் சீக்கிய மக்கள் தொகை 15,000 க்கு மேல் இல்லை. பஞ்சாபில் இருந்து இந்து மற்றும் சீக்கிய மக்கள் பாதுகாப்புக்காக மிர்பூருக்கு வந்ததால் அது 25,000 ஆக உயர்ந்திருந்தது.

1947,ல் மிர்பூரில் அழிந்து உயிர் தியாகம் செய்தவர்கள் சனாதன தர்மத்தை நம்பியதன் 'தவறு' மட்டுமே என்பதை நினைவுபடுத்துகிறது. 

அவர்களின் தியாகம் வீண் போகாது, ஏனென்றால் அவர்கள் எதற்காக இறந்தார்கள் என்பதை நாங்கள் நினைவில் கொள்கிறோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X