A.K.M. Ramzy / 2021 ஜூன் 14 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் சென்றிருந்தார். அப்போது, மேட்டூரை சேர்ந்த பெண் பொறியியலாளர் இரா.சௌமியா என்பவர் முதலமைச்சருக்கு கடிதமொன்றை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த அந்தக் கடிதத்தைப் படித்து பார்த்த முதலமைச்சர் ஸ்டாலினின் நெஞ்சம் நெகிழ்ந்தார்.
அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது; ‘என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா நிதித்தொகையாக எனது கழுத்தில் இருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியை நிதியாக கொடுக்க விரும்புகிறேன்.' என்று கூறியிருந்தார். மேலும், தனது குடும்ப சூழ்நிலையை விளக்கியதுடன், 'எனக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால்கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்'என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து, தனது சமூக வலைதளப்பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு:-
“மேட்டூர் அணையை திறக்க சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் கடிதம் என் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்புக்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.'
என்று அதில் கூறப்பட்டுள்ளது.
15 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago