2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

நொறுக்கு தீனி இன்றி வைன் குடித்த எலிகள்

Editorial   / 2021 ஜூலை 06 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில், மதுக்கடைகளுக்குள் புகுந்து, சத்தமே இன்றி, அங்கிருந்த செறிவு மதுபானங்களை குடிக்காது, வைன்களை மட்டுமே எலிகள் குடித்திருந்த சம்பவம், பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கூடலூரிலுள்ள மதுக்கடைகளிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வந்ததால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (05)  முதல் சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. இதையொட்டி காலையிலேயே கடைகளுக்கு வந்து சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மதுக்கடைகளுக்கு காலையிலேயே உரிமையாளர்களும் பணியாளர்களும் அங்கு  கால்போத்தல்களை கொண்ட 12 வைன் போத்தல்கள் வெறுமையாக கிடந்தை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்தப் போத்தல்களின் மேல்பக்கத்திலிருந்த  ஈயத்தினால் ஆன மூடிகள் துளையிடப்பட்டிருந்தன. அத்துடன், அங்குமிங்கும் இரண்டொரு எலிகள் ஓடித்திரிந்துள்ளன. அவ்வாறு எலிகளால் குடிக்கப்பட்ட வைன் ​போத்தல்களின் மொத்தப்பெறுமதி .1,680 ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .