2025 ஜூலை 19, சனிக்கிழமை

பறந்த முத்தத்தால் நின்ற திருமணம்

Freelancer   / 2023 ஜூலை 05 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப்பிரதேசத்தில் சம்பல் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்கும் போது மணப்பெண் பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் மணப்பெண்ணின் அம்மா சிகரெட் பிடித்து வரும் விருந்தாளிகளின் முகத்தில் ஊதியுள்ளார். இந்த சம்பவம் மணமகனுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இருவரின் செயல்களினால் விரக்தியடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இது குறித்து, மணமகனின் குடும்பத்தினர் கூறுகையில், அவர்கள் திருமண அரங்கிற்கு வந்தபோது வரவேற்பு வழங்கப்பட்டதாகவும், சிறிது நேரத்திலேயே மணப்பெண்ணின் தாயார் போதையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சிகரெட் பிடித்து விருந்தினர்கள் முகத்தில் மீது ஊதியதாகவும் கூறினர். இதனால், எரிச்சலடைந்த மணமகன் இதற்கு மேல் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறி திருமணத்தை நிறுத்தியதாக மணமகனின் தந்தை கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X