2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பா.ஜ.க விலிருந்து விலகியவர்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

Ilango Bharathy   / 2021 ஜூன் 26 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கு  இடையே கடுமையான அரசியல் மோதல் நிலவி வருகின்றது.

இந்நிலையில் பா.ஜ.க விலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்ட 150க்கும் மேற்பட்டோருக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் கூறுகையில், பா. ஜ.கவிலிருந்து விலகிய அவர்கள் அனைவருக்குள்ளும் பா.ஜ.க என்னும் வைரஸ் இருக்கும். அதை அகற்றும் விதமாகவே கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டனர் எனத் தெரிவித்தனர்.

இது குறித்து வெளியான வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும் அண்மையில், மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பா.ஜ.கவில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்.

அப்போது அவர்கள், மொட்டையடித்து கங்கையில் குளித்து தங்களை சுத்தப்படுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X