2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

பாக். துதரக அதிகாரியை வெளியேறுமாறு உத்தரவு

Freelancer   / 2025 மே 14 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி இந்தியாவுக்கு எதிராக செயற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

 அவரை ஏற்றுக்கொள்ள முடியாதவர் என அறிவித்து உள்ளதுடன்,  அவரை 24 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து தூதரக அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தூதரக ஊழியருக்கு தகவலை வழங்கியதாக பஞ்சாபை சேர்ந்த 2 பேரை கைதுசெய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X